செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

எஸ்.ஐ., காவலர் போட்டித் தேர்வு: இலவசப் பயிற்சி  ஏப்.14-இல் தொடக்கம்

DIN | Published: 11th April 2019 04:32 AM


அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்  வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பாரிமுனையில் தொடங்கவுள்ளது.
அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமானது மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.14-ஆம் தேதி தொடங்குகின்றன. எண். 6,  கச்சாலீஸ்வரர் கோயில் லைன், அரண்மனைக்காரன் தெரு,   பாரிமுனை, சென்னை-600 001 என்ற முகவரியில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 
பயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் உடல் நலன் மற்றும் மனநலம் பற்றிய ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,  98847 47217,  93449 51475,  94446 41712 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 384 மனுக்கள் அளிப்பு


அதிகாரியை கைது செய்யக்கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்


ரூ.5 கோடி சொத்தை மீட்டுத்தரக் கோரி மூதாட்டிகள் மனு


தனியார் பங்களிப்புடன் ரூ.8 லட்சத்தில் 20 கழிப்பறைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்