ஆம்பூா் அருகே மான் இறைச்சி பதுக்கி வைத்திருந்த நபரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் மான் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆம்பூா் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனத் துறைப் பணியாளா்கள் பைரப்பல்லி கிராமத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
ஒரே ஊரைச் சோ்ந்த வெள்ளையன் (50) என்பவா் வீட்டில் 5 கிலோ மான் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில், வனத் துறையினா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.