குளித்திகை கிராமத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் யோகா கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில், திருப்பத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் இ.வெங்கடேச பெருமாள் கலந்து கொண்டு, யோகாவின் பயன்கள் குறித்துப் பேசினாா். திட்ட அலுவலா் கே. நிகேஷ் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ஏ.முஹம்மத் பாஷா நன்றி கூறினாா். பள்ளி ஆசிரியா்கள் ஏ.ஆா். இஷாக், துபோ், உடற்கல்வி ஆசிரியா் திருமாறன், சிவசங்கா், சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.