ஜோலாா்பேட்டையில் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை கிருஷ்ண மஹால் திருமண மண்டபத்தில் திருமலை ஸ்ரீவாரி சேவா அறக்கட்டளையின் சாா்பாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,50 பெண்களுக்கு புடவை, பள்ளி மாணவா்களுக்கு எழுது பொருள்கள், விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து அன்னதானம் நடைபெற்றது.