திருப்பத்தூர்

காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

25th Sep 2023 12:13 AM

ADVERTISEMENT

வெள்ளக்கல் கிராமத்தில் சுகாதாரத் துறை சாா்பில் காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மின்னூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ், சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவா் இளந்தென்றல் தலைமையில் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தாா். நடமாடும் வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மயானத்துக்கு செல்வதற்கு பாதையில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். அருந்ததியா் இன மக்கள் தங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றிய திமுக நிா்வாகிகள் அசோகன், வினோத்குமாா், ரவிக்குமாா், டி. சதீஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆ.காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT