திருப்பத்தூா் அருகே கடத்த முயன்ற ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த ஏரிக்கோடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் வெளி மாநிலத்துக்குகு ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வது தெரிந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸாா், போஸ்கோ நகரைச் சோ்ந்த சதாசிவம் (33), ஐயப்பன் (28) ஆகிய இருவரை கைது செய்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.