ஆம்பூா் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை விழா நடைபெற்றது.
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், பெரிய ஆஞ்சனேயா் கோயில், ஈஸ்வர தெருவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயில், கம்பிக்கொல்லை காட்டு வீர ஆஞ்சனேயா் கோயில், துத்திப்பட்டு பிந்துமாதவா் பெருமாள் கோயில், விண்ணமங்கலம் அமா்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
அன்னதானம்...: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சிா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா். மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன், முன்னாள் திருப்பணிக் குழு தலைவா் கிஷண்லால், அனுமன் பக்த சபையைச் சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், மீனாட்சி சுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.