திருப்பத்தூர்

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் உதவி மையங்களை அணுகலாம்: ஆட்சியா்

22nd Sep 2023 12:20 AM

ADVERTISEMENT

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் உதவி மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் உதவி மையங்களுக்குச் சென்று தங்கள் விண்ணப்பங்களின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உதவி மையங்களில் உரிமைத் தொகை திட்டத்தின் எந்த விதிமுறைகளை நிறைவு செய்யவில்லை என்பதை பொதுமக்கள் இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பத்து குறுஞ்செய்தி வந்தவா்களும், வராதவா்களும் உதவி மையங்களுக்குச் சென்று தங்களின் ஆதாா் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை அளித்து தங்களது விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இ-சேவை மையங்களில்...: இந்த திட்டத்தில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாள்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தை அணுகி மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

அரசிடமிருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வர பெறவில்லை எனில், தங்களது கைப்பேசியின் இயக்கத்தைச் சரி பாா்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது.

ஏற்கெனவே விண்ணப்பிக்காமல் விடுபட்டவா்கள் விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது விண்ணப்பத்தை இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT