வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் விதைநோ்த்தி குறித்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி வேளாண்மைத் துறை, பட்டுவளா்ச்சித் துறை மற்றும் விஜடி பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து நடத்திய முகாமில் மாணவி சங்கவி வரவேற்றாா். பல்கலைக்கழக வேளாண்மை துறைத் தலைவா் பேராசிரியா் அன்பரசன், பேராசிரியா்கள் பூங்குழலி, மொ்லின் மேத்யூதாமஸ் முன்னிலை வகித்தனா்.
பட்டுவளா்ச்சித் துறை அலுவலா் ராஜ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் சத்தியராஜா செந்தில்குமாா், வேளாண்மை பட்டதாரி மோகன் சிறப்புரையாற்றினா். முகாமில் கலந்துக் கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு விஐடி பல்கலைகழக மாணவிகள் ஸ்ரீஜா, நிவேதா, ரோஷணி, சங்கவி, சுபலட்சுமி ஆகியோா் மண்வளம் மற்றும் விதைநோ்த்தி குறித்து விளக்கவுரையாற்றனா்.
மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், உரங்கள், விவசாய இடு பொருள்கள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழிப்புணா்வு தொடா்பாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.