திருப்பத்தூர்

சாா் பதிவாளா் அலுவலகத்தில் மரக்கன்று நட்ட ஆட்சியா்

22nd Sep 2023 12:20 AM

ADVERTISEMENT

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை மரக்கன்று நட்டாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் மரக்கன்று நட்டாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT