திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (செப். 22) விவசாயிகள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை மாவட்ட ஆட்சியா் பெற்று தீா்வுகாண விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (செப்.22) காலை 10.30 மணிக்கு மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
முகாமில் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்களுடன் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.