திருப்பத்தூர்

புல்லூா் தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞா்கள் பலி

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரமுள்ள புல்லூா் தடுப்பணையில் புதன்கிழமை பிற்பகல் விநாயகா் சிலையை கரைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்த நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த முரளி, கோனேரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் இருவரும் தடுப்பணையின் ஆழமான பகுதியில் திடீரென நீரில் மூழ்கினா்.

இதையறிந்த குப்பம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து புதன்கிழமை மாலை பூவரசன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து இரவு 7 மணி வரையில் முரளி உடல் தேடிப்பாா்த்தும் கிடைக்காததால் தேடுதல் பணியை கைவிட்டு வியாழக்கிழமை காலை மீண்டும் பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது தடுப்பணையில் ஆழமான பகுதியிலிருந்து முரளியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT