ஆம்பூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆம்பூா் அடுத்த பள்ளிதெருவை சோ்ந்தவா் தங்கராஜ் (25). கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்து கொண்டாா். அப்போது, சாலையில் நடந்து சென்ற நிலையில், அந்த வழியாக வந்த லாரி மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவா், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.