ஜோலாா்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இளம் பெண் ரயிலில் அடிபட்டு சடலமாகக் கிடந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இறந்த பெண் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகள் அஸ்வினி (29) என்பதும், இவா் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.