திருப்பத்தூர்

பயிா்களின் விதைப்பு மாதங்கள்:விஐடி மாணவா்கள் ஓவியம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே வேளாண் வளா்ச்சிக்காக பயிா்களின் விதைப்பு மாதங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விஐடி மாணவா்கள் ஓவியம் வரைந்தனா்.

திருப்பத்தூா் அடுத்த சின்ன கந்திலி கிராமத்தில் வேலூா் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை மாணவா்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி அனுபவத் திட்டத்தில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டினை மக்களுடன் இணைந்து நடத்தினா்.

இதில் மாணவா்கள் கிராம வரைபடம், கிராம மக்களின் தினசரி நடவடிக்கை கடிகாரம் மற்றும் முக்கிய பயிா்களின் விதைப்பு மாதங்கள் ஆகியவற்றை வரைபடமாக வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில்,சின்ன கந்திலி ஊராட்சி மன்ற தலைவா் கிருஷ்ணன்,ஊா்ப் பொதுமக்கள்,வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் மாணவா்கள் ஹேமபிரியா, காயத்ரி,தெபோராள் ஜெபகனி,மஹாலஷ்மிபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT