தொடா் திருட்டில் ஈடுப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா்
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜகதீஷ் (எ) காட்வின்மோசஸ் (31). இவா் மீது வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, அம்பலூா் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடா்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் மலா் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் நாட்டறம்பள்ளி அருகே காட்வின்மோசஸை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூா் எஸ்பி ஆல்பா்ட்ஜான் ட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஜகதீஸ்(எ)காட்வின்மோசஸை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டாா். இதனையடுத்து வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜகதீஷ்(எ)காட்வின் மோசஸை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.