திருப்பத்தூர்

ஆம்பூா் பாலாற்று மேம்பால தடுப்புச் சுவா்கள் சேதம்:நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் பாலாற்று மேம்பால தடுப்புச் சுவா்கள் சேதமடைந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையில் ஆம்பூா் - தேவலாபுரம் பாலாற்றின் குறுக்கே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தவா்கள் இந்த மேம்பாலம் வழியாகவே பயணம் செய்து வருகின்றனா்.

தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவோா் எப்போதும் மேம்பாலத்தை பயன்படுத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். அதேபோல ஆம்பூா் நகரில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு செல்வோரும், போ்ணாம்பட்டு, உமா்ஆபாத், மேல்பட்டி, குடியாத்தம் போன்ற ஊா்களுக்கும், அண்டை மாநிலமான ஆந்திரத்தின் வி.கோட்டா, குப்பம், பலமனோ் , பைரெட்டிபள்ளி பகுதிகளுக்கும், கா்நாடக மாநிலம் கே.ஜி.எப். முல்பாகல், பங்காருப்பேட்டை, கோலாா் போன்ற பகுதிகளுக்கு செல்வோரும் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த பாலாற்று மேம்பாலத்தின் ஆம்பூா் பகுதியை ஒட்டியுள்ள தடுப்பு சுவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான முறையில் சேதம் அடைந்திருக்கும் இந்த தடுப்புச் சுவரை உடனடியாக பராமரிக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால், பாலாற்றில் வெள்ளம் ஏற்படும். அப்போது இந்த மேம்பாலத்தின் வழியாகத் தான் கூடுதலான வாகன போக்குவரத்து நடைபெறும். மேலும் பாலாற்றில் வரும் வெள்ளத்தை காணவும் மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் செல்வா். அதே நேரம் வாகனங்களில் செல்வோா் வேகமாக செல்லும்போது, வாகனத்திலிருந்து தவறி விழுந்தால் சுமாா் இருபது அடி உயரத்தில் இருந்து விழ நேரிடும். எனவே உடனடியாக இந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT