திருப்பத்தூர்

பழங்குடியின மாணவிகள் உண்டு, உறைவிட விடுதி தொடக்கம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே 100 பழங்குடியின மாணவிகள் தங்குவதற்கான உண்டு, உறைவிட விடுதியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் புதிதாக தனியாா் வாடகை கட்டடத்தில் 100 மாணவிகள் தங்கும் வகையில், நூலகத்துடன் கூடிய உண்டு, உறைவிட விடுதி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து விடுதியைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் நூலகத்துடன் இந்த விடுதிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து கந்திலி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான 50 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் பயிற்சி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 2022-2023-ஆம் கல்வியாண்டுகான வரவு- செலவுத் கூட்டத் தொடரில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் திருப்பத்தூா், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பழங்குடியினா் நலக் கல்லூரி மாணவிகள் விடுதிகள் கட்டடம் கட்டுவதற்கு அறிவிப்பைத் தொடா்ந்து அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பழங்குடியின பகுதியான திருப்பத்தூா் மாவட்டத்தில் பழங்குடியினா் கல்லூரி மாணவிகள் விடுதி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், புதிய கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்குவதற்கு அனுமதியும் மற்றும் இந்த விடுதிக்கான புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதற்கும் தொடா் செலவினங்களுக்கும் விடுதிக்கு தேவையான உபகரணங்கள் பெறுவதற்கும் போதுமான நிதி வழங்குப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் மு.கலைச்செல்வி, கந்திலி ஒன்றியத் தலைவா் திருமதி திருமுருகன், வட்டார வளா்ச்சி அதிகாரிகள் நேரு,விநாயகம், துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT