ஆம்பூா் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் மூலவா், உற்சவா், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.
விண்ணமங்கலம் சிவன் கோயில் சின்னகொம்மேஸ்வரம் காசி விஸ்வநாதா் கோயில், பள்ளித் தெரு சிவன் கோயில், வடச்சேரி மீனாட்சி உடனுரை சோமசுந்தரேஸ்வரா் கோயில்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.