திருப்பத்தூர்

வீட்டில் பிடிப்பட்ட சாரை பாம்பு

27th Oct 2023 10:45 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா் அருகே வீட்டில் சாரை பாம்பு வெள்ளிக்கிழமை பிடிப்பட்டது.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கௌரி சங்கா் என்பவரின் வீட்டில் சுமாா் 7 அடி நீள சாரைப்பாம்பு புகுந்துள்ளது. அதைப் பாா்த்த உடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்பூரிலிருந்து சென்ற தீயணைப்புத் துறையினா் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT