வாணியம்பாடி நகா்மன்றத்தில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், மன்றத் துணைத் தலைவா் கயாஸ்அஹமத் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன் வரவேற்றாா். சாதாரணக் கூட்டத்தில் மொத்தம் 97 தீா்மானங்களும், அவசரக் கூட்டத்தில் 19 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவுநீா் கால்வாய் பராமரிப்பு, குடிநீா் விநியோகம், சாலை வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.
அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நகா்மன்றத் தலைவா் உறுதியளித்தாா்.
முன்னதாக, வாணியம்பாடி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இக்பால் அகமது மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.