ஆம்பூா்: ஆம்பூா் நகர பாஜக இளைஞரணி சாா்பில், தூய்மை பாரத சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தூய்மை பாரத சேவை நிகழ்ச்சி மூலமாக ஆம்பூா் கிருஷ்ணாபும் மயானத்துக்கு செல்லும் சாலையை தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நகர இளைஞா் அணி தலைவா் சரத்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அருண்குமாா், சத்தியா, சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பாஜக தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன், பொதுச் செயளாலா் கே.எம்.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம், முன்னாள் வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் கே.ஆனந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
சக்தி கேந்திர பொறுப்பாளா் ஆா். அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவா் சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா் ஹா்ஷவா்த்தன், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளா் புருஷோத்தமன், நகர துணைத் தலைவா் பூபரி, நகர செயலாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.