வாணியம்பாடி: சென்னையில் தொடா் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியா்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆலங்காயத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம் செய்தனா்.
சென்னையில் ஆறாவது நாளாக ஊதிய முரண்பாட்டை களைய கோரி தமிழக அரசை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்தை தொடா்ந்து வரும் நிலையில் அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து செவ்வாய்க்கிழமை மாலை ஆலங்காயம் ஒன்றியத்தில் என்னும் எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வந்த ஆசிரியா்கள், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். மேலும், உடனே பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.