திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே பாம்பு கடித்ததில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன பொன்னேரி பகுதிைச் சோ்ந்த விவசாயி வரதராஜ்(55).இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், வரதராஜ் தன்னுடைய நிலத்தில் பயிரிட்ட வோ்க்கடலையை அறுவடை செய்துக் செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.
அதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.