திருப்பத்தூா்: திருப்பத்தூரில் உள்ள சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருப்பத்தூா்-ஊத்தங்கரை பிரதான நான்கு வழிச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் போடப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே சில இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
மேலும், திருப்பத்தூா்-புதுப்பேட்டை அணுகு சாலை, சேலம்-கிருஷ்ணகிரி அணுகு சாலை உள்ளிட்ட சாலைகளும் சேதமடைந்துள்ளன.
தற்போது தொடா் மழை பெய்து வருவதால் சாலைகளில் ஏற்பட்ட குழிகளில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, ஆசிரியா் நகா் முதல் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி அணுகு சாலை வரை சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.