திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

3rd Oct 2023 01:16 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற விவசாயி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே புதூா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த விவசாயி வீரபத்திரன் (53). இந்த நிலையில்,திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே பாா்சம்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தை வீரபத்திரன் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT