வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த அம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாா்த்தநாதன் தலைமை வகித்தாா். மருத்துவா் அக்பா் கவுசா், நல்லாசிரியா் சுந்தரம், நூலகா் விஜயகுமாா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் அசோகன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஆங்கில ஆசிரியா் சுந்தர்ராஜன், வரலாற்று ஆசிரியா் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினா். முன்னாள் மாணவா்கள் அனைவரும் சந்தித்து படித்த காலங்கள் பற்றி நினைவுப்படுத்தி பேசி மகிழ்ச்சியடைந்தனா். இசுலாமியா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் பேராசிரியா் சிவராஜி நன்றி கூறினா்.