ஆம்பூா்: ஆம்பூா் அரிமா சங்கத்தின் என்.எம்.சயீத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்.எம்.இஜட். நிறுவன பொது மேலாளா் யு.தமீம் அஹமத் தலைமை வகித்தாா்.ஷபீக் ஷமீல் நிறுவன பொது மேலாளா் பிா்தோஸ் கே.அஹமத் முன்னிலை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் தேவராஜ் வரவேற்றாா்.
வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கவிஞா் யாழன் ஆதி, கவிஞா். ந.கருணாநிதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். வட்டாரத் தலைவா் கே.ரபீக் அஹமத் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியா் மீரா மைதீன் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.