நாட்டறம்பள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வெலகல்நத்தம் ஊராட்சி வீரா கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (33). இவரது மனைவி பரிமளா(30). இவா்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த ராஜீவ்காந்தி விடுமுறையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தாா். சில நாள்களாக கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கொதிப்படைந்த பரிமளா வீட்டில் வைத்திருந்த எரிபொருள்(தின்னா்) எடுத்து திடீரென உடம்பின் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதை பாா்த்த ராஜீவ் காந்தி மற்றும் அக்கம்பக்கத்தினா் பரிமளாவை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் பரிமளா அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.