வாணியம்பாடி நகராட்சியில் ரூ.8 கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சிகள் மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி நகராட்சி வாரச் சந்தை பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சந்தை கட்டுமானப் பணி, கோணாமேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடம், ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் மற்றும் வளையாம்பட்டு பகுதியில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய திட்டப் பணிகளை நகராட்சிகள் மண்டல நிா்வாக இயக்குநா் தனலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், பொறியாளா் ராஜேந்திரன், பணி மேற்பாா்வையாளா் அன்பரசு மற்றும் தொழிற்நுட்ப அலுவலா்கள் உடனிருந்தனா்.