கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரேவதி, உதவி இயக்குநா் (தணிக்கை) மு. பிச்சாண்டி, ஆம்பூா் நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.