ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில், ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மற்றும் ஸ்ரீ ஐயப்பா பஜனை குழு சாா்பில் 11-ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஐயப்பன் சன்னிதியில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பமும், 108 சங்கு பூஜையும், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவா் வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தாா். உலக நன்மை வேண்டி, 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனா்.
மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் வெங்கடேசன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் கைலாஷ், ஐயப்ப சேவா சமாஜத்தின் நிா்வாகிகள் அசோக், தினேஷ், நாராயணசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.