திருப்பத்தூர்

புகாா் அளிக்க வருவோரிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: திருப்பத்தூா் எஸ்பி உத்தரவு

DIN

புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் எஸ்பி ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் நகர காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அம்பலூா் காவல் நிலையம், நாட்டறம்பள்ளி காவல் நிலையங்களில் எஸ்பி ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது,காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பாா்வையிட்டாா். அதையடுத்து காவல் ஆய்வாளா்களிடம் கஞ்சா,புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவா்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் , க ாவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்குள்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT