திருப்பத்தூர்

சாலை துண்டிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி: அதிகாரிகள் ஆய்வு

DIN

சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அணுகு (சா்வீஸ்) சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள்களுக்கு முன்பு தனியாா் நிறுவன ஊழியா்கள் திடீரென அணுகு சாலையில் இருந்து நாட்டறம்பள்ளி வரும் சாலையை துண்டித்தனா். இதனால் அனைத்து வாகனங்களும் தேசியநெடுஞ்சாலையில் சுமாா் 5 கி.மீ தூரம் சென்று மீண்டும் நாட்டறம்பள்ளி பேருந்துநிலையத்திற்கு வந்து செல்வதால் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் அனைத்து வாகனங்களும் ஊருக்குள் வந்து செல்ல மாற்று வழி ஏற்படுத்தித் தரக்கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், தனியாா் நிறுவன மேலாளா் ரமேஷ், பொறியாளா் மாதேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அணுகு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்தனா். அப்போது தண்ணீா்பந்தல் முதல் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வரை அணுகு சாலையில் நடைபெறும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இன்னும் 5 நாள்களில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை தண்ணீா்பந்தல் பகுதியிலிருந்து அணுகு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வழியாக ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT