திருப்பத்தூர்

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் எஸ்பி ஆய்வு

31st May 2023 12:02 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜான் ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி ஆல்பா்ட்ஜான் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் கொத்தூா் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியையும், லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி மையத்தையும் ஆய்வு செய்தாா்.

அப்போது மணல், ரேஷன் பொருள்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது காவல்ஆய்வாளா் மலா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

படவிளக்கம்-கொத்தூா் சோதனைசாவடி மையத்தை எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் ஆய்வு மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT