திருப்பத்தூர்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

31st May 2023 12:03 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாணியம்பாடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரடியாக வந்து கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தொழில்பிரிவுகள் பயிற்சிக்கு கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோல் பொருள் உற்பத்தி பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு வரை படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இத்தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

பயிற்சியில் சேரும் அனைத்து மாணவா்களுக்கும் அரசாங்கத்தின் இலவச பேருந்து பயணம், சீருடை, உதவித்தொகை, இலவச மிதி வண்டி, மடிக்கணினி, பாடப் புத்தகங்கள் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT