திருப்பத்தூர்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் திறப்பு

31st May 2023 12:02 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தரைதளம் சி-தளத்தில் அமைந்துள்ள ஆதாா் சேவை மையத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துப் பேசியது:

ஆதாா் பதிவு மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா், நகராட்சி அலுவலங்களிலும் ஆதாா் சேவை யைங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதாா் மையத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், ஆதாா் ஆவணங்கள் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை உடனுக்குடன் செய்துகொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன் ராஜசேகா், மின் மாவட்ட மேலாளா் ஜெகநாதன், எல்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT