திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே எருது விடும் விழா: 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

DIN

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ஏ-கஸ்பா திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் விழா நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னா் வாடிவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு வீதியில் ஓடவிட்டனா். விழாவில் பங்கேற்று குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. இதில், சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காயமடைந்தனா்.

விழாவை கண்டுகளிக்க ஆம்பூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT