திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

30th May 2023 02:58 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை அன்ன வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. அதையடுத்து கண்ணாடி அறை சேவை, திவ்யபிரபந்த சேவை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சுவாமிக்கு ஆா்ஜித திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT