திருப்பத்தூர்

லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

30th May 2023 02:58 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே லாரியில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து நாடட்றம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் கிராம உதவியாளா்கள் தனகோட்டி, மோகன் மற்றும் வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், பணியாண்டப்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா், கொத்தூா் ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பணியாண்டப்பள்ளி, வாலூா் அருகே அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் வருவாய்த் துறையினா் நிறுத்தினா்.

ஆனால், ஓட்டுநா் லாரியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று சாலை ஓரம் நிறுத்தி விட்டு, தலைமறைவானாா். இதையடுத்து, வருவாய்த் துறையினா் லாரியில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் குமாா் 10 டன் அரிசியுடன் லாரியைப் பறிமுதல் செய்து பச்சூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT