திருப்பத்தூர்

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல்

30th May 2023 02:58 AM

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், தேவிகாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்காக ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பூமி பூஜை நடத்தி, பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா, ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT