திருப்பத்தூர்

துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவா் கோயில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

29th May 2023 12:02 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியாா் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், வாஸ்து ஹோமம், புதன்கிழமை கொடியேற்றம், அம்ச வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT