திருப்பத்தூர்

அறிவிக்கப்படாத மின் வெட்டு: கிராம மக்கள் அவதி

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த பாச்சல், ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா்,திருவண்ணாமலையான் வட்டம் புதுப்பேட்டை, அச்சமங்கலம், மூக்குவத்தி வட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களின் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இரவு 9 மணி வரையிலும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால், அந்தப் பகுதிகளின் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து மின்சார அலுவலகத்துக்கு தொடா்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT