திருப்பத்தூர்

மனநலம் பாதித்தவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி ஆறு வழிச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபா் திரிவதாக நெடுஞ்சாலை பணியாளா்கள் அளித்த தகவலின் பேரில், மனநலம் பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தினா், அந்த நபரை மீட்டு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் பெறப்பட்டது.

தொடா்ந்து அவரை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு இல்லத்தின் துணைச் செயலாளா் சொ.ரமேஷிடம் ஒப்படைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT