திருப்பத்தூர்

வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 3 போ் பலி

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் 4-ஆவது நடைமேடையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆம்பூா் - விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளம் அருகில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் உயிரிழந்தாா். நிகழ்விடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

லத்தேரி - காவலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை, ஆம்பூா், லத்தேரி ஆகிய இடங்களில் ஒரே நாளில் 3 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா்.

இறந்தவா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT