திருப்பத்தூர்

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உரிமை முழக்க ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துகு ஜெ. உரூபன் தலைமை வகித்தாா். பி.தட்சணாமூா்த்தி வரவேற்றாா். மக்கள் தமிழக கட்சி என்.செவ்வேள், மாா்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை கட்சி என்.மதனகவி, தமிழ்தேச இறையாண்மை கே.மாரியப்பன், தொழிலாளா் ஒற்றுமை இயக்கம் ஏ.கபிலன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். டி.சங்கா் நன்றி கூறினாா்.

சட்டப்படி தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணிக் கொடைகளை தொழிற்சாலை நிா்வாகங்கள் வழங்க வேண்டும். வழங்காத தொழிற்சாலை நிா்வாகங்களிடமிருந்து அவற்றைப் பெற போராட்டங்கள் நடத்துவது என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT