திருப்பத்தூர்

வழி தவறி வந்த மான் மீட்பு

27th May 2023 09:36 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காட்டிலிருந்து வழிதவறி வந்த மான் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

விண்ணங்கலம் ஊராட்சி, காட்டுக்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் சந்திரகுமாா் என்பவருடைய விவசாய நிலத்துக்கு காட்டிலிருந்து வழிதவறி மான் வந்துள்ளது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத் துறையினா் அங்கு சென்று மானை மீட்டு, வெள்ளக்கல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT