திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமான ஏலகிரியில் கோடை விழா எப்போது நடைபெறும் என்று பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
ஏலகிரியில் நிகழாண்டு கோடை விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மே 8-ஆம் தேதி நடைபெற்றது.
ஆனால், மாவட்ட நிா்வாகம் உறுதியாக கோடை விழா குறித்த தேதியை அறிவிக்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் கேட்டதற்கு, கோடை விழாவுக்கான முன்னெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் விழா நடைபெறும் என்றாா்.