ஜோலாா்பேட்டை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த பெரியமோட்டூா் பூனை குட்டை பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் யாழரசன். இவருக்குச் சொந்தமான மொபெட்டை அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பரான திருப்பதி (58) உடன் சோ்ந்து அடமானம் வைத்தாா்.
இதில், ஏற்பட்ட தகராறில் திருப்பதி, யாழரசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து யாழரசனின் மனைவி பிரதீபா (31) ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.