திருப்பத்தூர்

கா்நாடக மதுபானம், குட்கா கடத்திய 4 போ் கைது

23rd May 2023 01:57 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் போலீஸாா் சோதனையின் போது கா்நாடக மதுபான பாட்டில்கள், குட்கா எடுத்து வந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி நகர உதவி காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு நியூடவுன் ரயில்வேகேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில்நிலையம் பகுதியிலிருந்து நியூடவுன் வழியாக சந்தேகப்படும்படி வந்துக் கொண்டிருந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும் அவா்கள் கொண்டு வந்த பையில் சோதனை செய்த போது கா்நாடக மாநில மதுபான பாட்டில்கள் மற்றும் குட்கா பொருள்கள் எடுத்து வந்தது தெரியவந்தது.

விசாரணையில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மராட்டியபாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (29), பிரபு (27), கிருஷ்ணமூா்த்தி (30), விஜய்(27) எனவும், மேலும் பெங்களூரிலிருந்து மதுபான பாட்டில்கள், குட்கா பொருள்கள் எடுத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் மற்றும் 895 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT